ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, இந்த மாதம் நடுப்பகுதியில், இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக, ஈரானுக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த 3 நாடுகளின் கடற்படைகளும் இணைந்து கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
இரண்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்த நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி (JOHN KIRBY) செய்தியாளர்களிடம் பேசிய போது, “கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள அமெரிக்காவின் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், எமது திறனுக்கும் தடையாக இருக்கும் என்று கருதவில்லை” எனவும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.