சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று திடீரென நாடாளுமன்றத்துக்குச் சென்று சபை அமர்வுகளைக் கவனித்துள்ளதுடன், கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக அரசாங்க, மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே,சிறிலங்கா ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர் பின்னர், ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.