சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை அரசுடைமை ஆக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
தண்டனை முடிந்து, சசிகலா சென்னை திரும்பிய நிலையில், இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள், அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில், ஆறு சொத்துக்கள், காஞ்சிபுரத்தில், 17 சொத்துக்கள், செங்கல்பட்டில், ஆறு சொத்துக்களும், பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தஞ்சாவூரிலும், தூத்துக்குடியிலும், திருவள்ளூரிலும் உள்ள சுதாகரன், மற்றும் இளவரசிக்கு சொந்தமான இடங்களும், பறிமுதல் செய்யப்பட்டன..
இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 7 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.