ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று, மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்த உரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் ஆயுத பெருக்கத்தைத் தடுப்பது ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் இதன்போது கவனம் செலுத்தியுள்ளனர்.
ஜோ பைடன் அமெரிக்க மக்களின் பாதுகாப்பையும் செழிப்பையும் பாதுகாப்பதாகவும், அதே நேரத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்பதாக உறுதியளித்தார்.
சந்திர புத்தாண்டினை முன்னிட்டு ஜி ஜிபிங்கையும் சீன மக்களையும் பைடன் வாழ்த்தினார். அமெரிக்க-சீன உறவுகளில் “நடைமுறை, முடிவுகள் சார்ந்த ஈடுபாடுகளை தொடரவும் உறுதியளித்தார்.