வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், நாடு முழுவதும் தொடருந்துமறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒரு வாரம் நடக்கும் போராட்டத்தால் ராஜஸ்தானில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு முழுவதும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இதுதவிர கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 14ஆம் திகதி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.