கனடிய அரச நிறுவனங்களில் பணியிட துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து வருடங்களில் ஆயிரத்து 132முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்கள் கடந்த ஆண்டுகளை விடவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக 2016இல் இருந்து 2017வரையான காலப்பகுதியில் 82சதவீதமாக இருந்த இந்த முறைப்பாடுகள் அதற்கு அடுத்த 2018-2019 காலப்பகுதியில் 166சதவீதமாக அதிகரித்துள்ளது.