ரொரன்ரோ நகரம் முழுவதிலும் உள்ள ஒன்பது பெரிய மருந்தகங்களில், வாரத்திற்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோ தடுப்பு ஊசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் மீண்டும் போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும், இந்த மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தடுப்பூசிகளைப் பெற முடியும் என்றும் ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி (JOHN TORY) தெரிவித்துள்ளார்.
பெரிய தடுப்பூசி மருந்தகங்கள் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், எனவும், அவர் கூறியுள்ளார்
கிடைக்கக் கூடிய தடுப்பூசி வகையைப் பொறுத்து, பெரும்பான்மையான மக்கள் ஒரு மருந்தகத்தில் அல்லது அவர்களின் மருத்துவரிடமிருந்து தங்கள் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்றும் ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தகங்கள், Metro Toronto Convention Centre, 255 Front St. W, Toronto; Congress Centre, 650 Dixon Rd; Malvern Community Recreation Centre, 30 Sewells Rd; The Hangar, 75 Carl Hall Rd. ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.