வன்கூவரில் கடுமையான குளிரான கால நிலை நீடிப்பதால் அங்கு ஏழு கதகதப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், லோயர் மெயின்லேண்டில் மிக மோசமான அளவில் குளிரான கால நிலை நீடிப்பதால் அங்கு வீடற்றவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் சாதாரண போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.