ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறித்த அறிக்கையில் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகவே, குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.
2018 ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், தேசிய பாதுகாப்புக் சபைக் கூட்டங்களுக்கு தம்மை முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கவில்லை என்று அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.