இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மார்க்ல், (Meghan Markle) அவரது தந்தை தோமஸ் மார்க்லுக்கு (Thomas Markle) எழுதிய கடிதத்தை வெளியிட்டமைக்கு எதிராக பிரிட்டன் பத்திரிகைக்கு மீது தொடர்ந்த தனியுரிமை மீறல் வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
சிறு வயதில் இருந்தே தந்தையை பிரிந்து வளர்ந்த மேகன் மார்க்ல், (Meghan Markle), 2018 ஆம் ஆண்டில் அவர் தந்தைக்கு எழுதிய கடித்தை பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி மெயில் (THE MAIL) என்ற பத்திரிகை வெளியிட்டது.
தனிப்பட்ட முறையில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டதாக அந்த பத்திரிகை வெளியீட்டாளரான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் (Associated Newspapers Limited) மீது மேகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், “வெளிப்பாடுகள் அதிகப்படியானவை”, “சட்டவிரோதமானது” “விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு மறாது” என நீதிபதி தீர்ப்பளித்தார்