சவுதியின் தென்மேற்கு பகுதியில், யேமன் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள, அப்ஹா (Abha ) சர்வதேச விமான நிலையம் மீது நேற்று ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு, யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
சவூதி அரேபிய விமான நிலையம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சவூதி அரேபியாவின் காமிஸ் முஷைட் (Khamis Mushait) விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த வந்த ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்களின், மற்றுமொரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சவூதி அரேபிய கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன.
சவுதி அரேபிய விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, யேமனில் உள்ள ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.