சிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல், இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் குறித்து ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இதன்போதே தொல். திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அவர்களது நிலம் மீண்டும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர், கோரிக்கை விடுத்துள்ளார்.