லடாக் எல்லையில் பங்கோங்சோ ( Pangong Tso) ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து, சீன மற்றும் இந்திய வீரர்களின் படைவிலக்கல் 10ஆம் நாள், தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுதொடர்பாக இந்திய இராணுவமோ, பாதுகாப்பு அமைச்சகமோ எந்த தகவலும் வெளியிடவில்லை.
அதேநேரம் எல்லையில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளபாடங்கள் திரும்பப் பெறப்பட்டு வருவதாக எல்லையோர வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.