கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று விடுத்த அறிவிப்பின் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமையை வரவேற்பதாக அறிக்கைகள் மூலம் தெரிவித்தனர்.
கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்கள் என்று பிரதமர் கூறவில்லை. மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்று மரிக்கார் கேட்டார். அதற்கு அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று கூறினார்
கொரோனாவினால் ஏற்படும் மரணம் தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு விசேட குழுவொன்று இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.