தமிழகத்தில் வழக்கம்போல, சட்டசபைத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்ப்பதாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை சென்றுள்ள தலைமை தேர்தல் ஆணையர் மற்றும், மூத்த அதிகாரிகள் குழுவினர் நேற்றும் இன்றும், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தமிழக தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோரா,
“தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாதுகாப்பிற்காக துணை இராணுவப் படையினர் கூடுதலாக அழைக்கப்படுவார்கள்.
கொரோனா காலத்தில் வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேர அவகாசம் வழங்கப்படுவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.