பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்ச்சி நிரல் ஏப்ரல் 12ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்ராரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் (Stephen Lecce) தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் கொரோனா நிலைமைகளை அடியொற்றியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மார்ச் மாதம் ஒன்ராரியோவில் 13 சுசுகாதாரப் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் மீளத்திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, பெப்ரவரி 16ஆம் திகதி அதில் ஒருதொகுதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அம்முடிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.