ஒன்ராரியோவின் பீல் பிராந்தியத்தில் உள்ள பாடசாலையொன்றில் பணியாற்றும் நபர் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபருக்கு கொரோனா தொற்றுக்கான எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படவில்லை என்பதோடு ஒருவாரத்தற்கும் அதிகமாக அவ்வாறான நிலையிலேயே இருந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாடசாலையில் இவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடுத்தவாரம் பீல் பிராந்திய பாடசாலைகள் அடுத்தவாரமளவல் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அங்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.