மக்கள் நீதி மையம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மையம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் இன்று, சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கமல்ஹாசன் தலைமையில் இடம் பெற்றது.
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்ட, இந்தக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.