வவுனியா நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சிலநாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகிறனர்.
வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த புதிய அரச பொது ஊழியர்சங்கத்தின் செயலாளர் கோல்டன் மற்றும் ஏனைய சில ஊழியர்களே தங்களுக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பொங்குதமிழ் தூபி நேற்றயதினம் நகரசபையால் முட்கம்பியை கொண்டு அடைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களால் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.