அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மூன்றாவது முறையாக முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய முடக்க நிலை புதன்கிழமை முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் விடுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரிடம் இருந்து 13 பேருக்கு தொற்று பரவியது கண்டறியப்பட்டதை அடுத்தே முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது,
எனினும், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், மாநில தலைநகரான மெல்பேர்னில் இடையூறின்றி நடக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.