ஊடகவியலாளர் ‘நாட்டுப்பற்றாளர்’ சத்தியமூர்த்தியின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் 12 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில், இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், அவரது நண்பர்கள் மற்றும் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதிப் போரின் போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில், 2009ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.