இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 143பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருகோடியே 08இலட்சத்து 92 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 103 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சாத்து 55 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.