இரண்டாவது கொரோனா அலையின் போது ஒன்ராரியோவில் மரணமானவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது
ஒன்ராரியோ வைத்தியசாலைத்தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மருத்துவத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புள்ளி விபரங்களின் பிரகாரம், கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் 3ஆயிரத்து 803பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 2ஆயிரத்து 394பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் பதிவாகியுள்ளன.