சிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது என்று ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமும், ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் தலைவருமான, சாள்ஸ் பெட்ரி (Charles Petrie) தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவை, நியூயோர்க் பல்கலைக்கழக மனித உரிமைகள் மற்றம் பூகோள நீதிக்கான நிலையம், சிறிலங்காவில் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கம், கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த, மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்கா பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு தன்னிடம் இல்லையென்று ஐ. நாவினால் கூற முடியாது.
சரியானதைச் செய்ய விரும்பும் ஐ.நா அதிகாரிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் உள்ளனர்.
ஆனால், ஐ.நாவுக்கு தைரியம் இல்லை என்பதால், சிறிலங்கா மக்கள், ஐ.நாவை சார்ந்து இருக்கக் கூடாது.
சிறிலங்கா மக்கள் ஐ.நா.வை நம்பினால் அவர்கள் ஏமாற்றமடையக் கூடும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.