சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரித்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து. பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈபிடிபியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினரான இவரது நியமனம் தொடர்பாக, சிறிலங்கா ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், தலைமையிலான இந்த ஆணைக்குழுவில், ஓய்வுபெற்ற காவல்துறைமா அதிபர் சந்திர பெர்னான்டோ, நிமல் அபேசிறி ஆகியோருடன், யோகேஸ்வரன் பற்குணராஜா நான்காவது உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவில் நாட்டின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளம் பிரதிபலிக்க வேண்டியதனை கவனத்தில் கொண்டே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.