இடைக்கால வரவு- செலவுத் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று ஆரம்பமாகி உள்ளது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் 5 வருட கால ஆட்சி, எதிர்வரும் மே மாதம் நிறைவடைய உள்ளமையால், இந்த வருடத்தின் இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தைதான் எதிர்வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.
இதேவேளை சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்தில், மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.