ஒன்ராரியோவில் காணப்படும் அத்தியாவசிய சேவைத்துறையினருக்கு விசேட கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகக்குறைந்தது ஆறு தடவைகள் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் அர்ப்பணிப்பை கவனத்திற்கொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அத்தியாவசிய சேவை வழங்கும் தொழில் தருநர்கள் தமது ஊழியர்கள் தொடர்பில் கவனம் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.