ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 5ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வெடி விபத்தில் தளபதி உட்பட ஐந்து பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.