பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம், கனடிய மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
கொரோனா பொதுச்சுகாதார விதிகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் கொரோனா பரவல் தொடர்பான வரைவில் ஆபத்தான கட்டத்தினை மூன்றிலிரண்டு பங்களவில் கடந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ச்சியாக வீட்டில் தங்கியருக்கும் வதிமுறைகளை அவர் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.