தமிழகத்தில் 615 மையங்களில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16 ஆம் திகதி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கிய தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2.27 இலட்சத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 2-வது தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.