கேரளாவில் அரசு உதவிபெறும் பாடசாலை ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பாடசாலைகளின் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடுவது, பிரசாரங்களில் ஈடுபடுவதை இதனை எதிர்த்து ஜிபு தோமஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அரசு உதவிபெறும் பாடசாலை ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிடுவது மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
எனவே அரசு உதவிபெறும் பாடசாலை ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர், “அரசு உதவி பெறும் பாடசாலை ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும், அவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதி அளித்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’’ என்றும் தலைமை நீதிபதி மணிகுமார் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.