ஆர்மீனியாவில் தனது அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக பிரதமர் நிகோல் பாஷின்யன் (Nikol Pashinyan) குற்றம்சாட்டியுள்ளார்.
நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் நடந்த மோதலில் ஆர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
இந்தநிலையில், பிரதமர் நிகோல் பாஷின்யனும் (Nikol Pashinyan) அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நிகோல் பாஷின்யன் (Nikol Pashinyan) கூறுகையில்,
‘என்னையும் எனது அமைச்சர்களையும் பதவி விலகுமாறு வலியுறுத்தியதன் மூலம், இராணுவம் எனது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனை எதிர்த்து, ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.
இராணுவத்துக்குப் பயந்து நான் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன். நாட்டுக்கு இப்போதைய தேவை பேச்சுவார்த்தைதானே தவிர, மோதல் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.