சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், உலக நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன் நேற்று அவர் நடத்திய தொலைபேசியில் உரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து விவாதித்துள்ளார்.
அத்துடன், சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்தும் இதன்போது இரு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.