சிறிலங்காவில் 5 கொரோனா மரணங்கள் இன்றைய நாளில் பதிவாகியுள்ளன.இதன்படி கொரோனா நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் 487 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 420 ஆக உயர்வடைந்துள்ளது.