சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கீச்சகத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரேஷி (Mahmoud Qureshi) தனது கீச்சகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இது தாமதாக எடுக்கப்பட்ட ஒரு சிறந்த தீர்மானம் என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் (Alina Teplitz) தெரிவித்துள்ளார்.
எனவே, அதனை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.