கனடாவில் நாடாளவிய ரீதியில் உள்ள மருந்து விற்பனை நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கான தடுப்பூசிகள் அடங்கிய இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவுகளில் காணப்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும், மேலதிகமாக அனைத்து கனடியர்களுக்குக்கும் கொரோனா தடுப்பூசியை கிடைக்கப்பெறச் செய்வதே இந்த விரிவாக்கத்திற்கான காரணமாகின்றது.