தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான நாட்களை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான அறிவிப்புகளை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி, கேரளா, தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தேர்தல் நடத்தப்படும்.
இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2ம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, கேரளாவில் மலப்புரம் மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.