முன்னாள் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்றுமுன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டு உதவி காவல்துறை பரிசோதகராக காவல்துறையில் இணைந்த அனுர சேனாநாயக்க எட்டு வருடங்களின் பின்னர் 1985 ஆம் ஆண்டு பிரதம காவல்துறை பரிசோதகராக பதவி உயர்வு பெற்றார்.
அவர் வீரகுல, வெயாங்கொட, கிளிநொச்சி, வெலிக்கட, ராகம மற்றும் மிரிஹான ஆகிய காவல்நிலையங்களில் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு சிசிடி எனப்படும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக 2011 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டார்.
வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கடந்த 2016 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.