கியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த வாரம் மொன்றியல் பிராந்தியத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், பிரிட்டிஷ் கொலம்பிய மக்களுக்கு தடுப்பூசி பற்றிய அறிவிப்பு திங்களன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பிரிட்டிஸ் கொலம்பியர்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை கியூபெக் கில் 858 தொற்றாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் கண்டறியப்பட்டுள்ளதோடு 16மரணங்கள் பதிவாகியுள்ளன.