சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (wang yi) உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒன்றேகால் மணிநேரம், தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றதன் விளைவாகவே, இருதரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டதாக, ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகள் வெளியேற வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள நிலைமை நீடிப்பது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்காது.
எனவே, எல்லை பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் விரைவாக செயல்பட வேண்டும்.
அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்குவது அவசியம். அது மட்டுமே அமைதியை மீட்டெடுக்கும். இருதரப்பு உறவினையும் முன்னேற்றும்.” எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.