கொரோனா தொற்று சூழலினால் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்துச் செய்யப்பட்டுள்ள போதிலும், சிறிலங்கா கடற்படையினரின் ஏற்பாட்டில் நேற்று நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின், 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்ட 7 அருட்தந்தையர்கள், மூன்று அருட்சகோதரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், கடற்படையினர் உட்பட 70 பேர் இந்த ஆராதனையில் பங்கேற்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.