மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று நடத்தப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாங்கோன் (yangon) மற்றும் ஏனைய நகரங்களில், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மியன்மார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போதே, இன்று காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் ஊடகவியலாளர்கள் நுழைவதற்குத் தடை விதித்துள்ள மியன்மார் காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கவும் மறுத்துள்ளனர்.
அதேவேளை ஆர்ப்பாட்டங்களின் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.