இரண்டு உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் (Harjit Sajjan) தெரிவித்துள்ளார்.
கனடிய படைகளின் கலாசாரம், பண்பாடுகளின் மாற்றத்தினை ஏற்படுத்தவல்ல இந்த அதிகாரிகளின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்ட் (Art McDonald) படைகளின் தலைமைப்பதவிலியிருந்து தானாகவே விலகுவதாக அறிவிக்கவுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இடைக்கால தலைவராக லெப்டினன் ஜெனரல் வெய்ன் ஐர் (Wayne Eyre) நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.