ஊடகவியலாளர் ஜமால் சசோகி கொலையில், சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பது குறித்து, நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க புலனாய்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி பட்டத்து இளவரசரின் ஒப்புதலுடனேயே, ஜமால் கசோகி கொலை நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தநிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பாக, நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.