ஓமான் வளைகுடாவில் தமது நாட்டுக்குச் சொந்தமான கப்பலை ஈரான் தாக்கியதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கூற்றுக்கு எவ்விதமான ஆதாரத்தையும் மேற்கோள்காட்டாமல் இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு சேவையிடம் கருத்து வெளியிட்ட பிரதமர் ” கப்பல் மீதான தாக்குதல் உண்மையில் ஈரானின் செயல், அது தெளிவாக உள்ளது” என்று கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்க சொந்தமான பஹாமியன் கொடியிடப்பட்ட ஹீலியோஸ் ரே (Helios Ray) என்ற சரக்குக் கப்பல், மத்திய கிழக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்தபோது மர்ம வெடிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது,