கொங்கோ ஜனநாயக குடியரசில், கூட்டு ஜனநாயகப் படைகள் என்ற ஆயுதக் குழுவினரால் 10 பொதுமக்கள் படுகொலை செய்ய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள போயோ (Boyo) என்ற கிராமத்தில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட 8 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாகவும், அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில், இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும் கொங்கோ இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆயுதக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களை கொங்கோ ஆயுதப் படைகள் ஆரம்பித்த பின்னர் அங்கு பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
உகண்டாவை தளமாக கொண்டு செயற்படும் இந்த இஸ்லாமிய ஆயுதக் குழு அங்கு அண்மைக்காலங்களால் எந்த தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.