தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கவும், 178 இடங்களில் தி.மு.க. நேரடியாக போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு 25, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 7, ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா 5, தொகுதிகளை ஒதுக்கவும், திமுக இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 2, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.