சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலிப் பகுதியில், மனநிலை பாதிக்கப்பட்ட மகன் மேற்கொண்ட தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.
64 வயதுடைய சீனிவாசன் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
தந்தைக்கும் மகனுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட, இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை அடுத்து, மகன் இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளார் என்றும், தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த மகன் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு அச்சுவேலி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.