ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் இதுவரை நடத்திய இரத்தக்களரி அடக்குமுறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த அடக்குமுறை காரணமாக மியான்மர் முழுவதும் பல நகரங்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதோடு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் மனித உரிமை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆங் சான் சூகி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த சுமார் ஆயிரம் எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அலுவலகம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஆபத்தான சக்தியைப் பயன்படுத்துவது மற்றும் தன்னிச்சையாக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) சுட்டிக்காட்டியுள்ளார்.