சிறிலங்காவில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, சிறிலங்காவில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மூவாயிரத்து 683 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்